திருவாடானை அருகே வீட்டின் மாடியில் இருந்த வைக்கோல் தீப்பற்றியது

திருவாடானை அருகே வீட்டின் மாடியில் வைத்திருந்த வைக்கோல் படப்பு தீப்பற்றி எரிந்ததை தீ அணைப்பு வீர்ர்கள் அணைத்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், திருவாடானை அருகே கண்ணன்புஞ்சை கிராமத்தில் ஆறுமுகம்(48) என்பவரது வீட்டின் மாடியில் வைக்கோல் வைத்து பாதுகாத்து வந்தார். இந்நிலையில் வெள்ளி கிழமை மதியம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

உடன் திருவாடானை தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடன் திருவாடானை தீ அணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் சென்ற வீர்ர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். சிறுவர்கள் விளையாடும் போது தீ வைத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.


Leave a Reply