தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன் – உதயநிதி ஸ்டாலின்

Publish by: --- Photo :


தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சென்னையில் தேனாம் பேட்டையில் திமுக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இளைஞர் அணியை மேம்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திமுக இளைஞர் அணியை மேம்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் தொடங்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். திமுகவின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு கடந்த 4 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply