இந்தியாவில் 94 விமான நிலையங்கள் நட்டத்தில் இயங்குகின்றன

இந்தியாவில் 94 விமான நிலையங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதாக விமான போக்குவரத்துதுரை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுத்து பூர்வமாக அவர் அளித்த பதிலில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் நிர்வகித்து வரும் 129 விமான நிலையங்களில் 2017 – 2018 ஆம் நிதியாண்டில் 94 விமான நிலையங்கள் இழப்பை சந்தித்து உள்ளதாக கூறினார்.

 

மொத்த செலவிற்கு ஏற்ப வருவாய் இல்லாதது போன்ற காரணங்களால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நட்டத்தை குறைத்து விமான நிலையங்களின் வருவாயை அதிகரிக்க இந்திய விமான நிலையங்கள் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மத்திய அமைச்சர் ஜெய்ன் சின்ஹா தெரிவித்து உள்ளார். விமான நிலையங்களில் திருட்டு சம்பவங்கள் கணிசமாக குறைந்து இருப்பதாக அவர் கூறினார்.

 

ஆளில்லா குட்டி விமானங்களை இயக்குவதற்கான பதிவு டிஜிட்டல் ஸ்கை என்ற இணையதளத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டதாகவும், தற்போது வரை எந்த நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் மற்றொரு கேள்விக்கு ஜெய்ன் சின்ஹா பதிலளித்தார்.


Leave a Reply