தண்ணீர் குடங்களை சுமந்து செல்லும் இரண்டு சக்கர தள்ளு வண்டிகள்

Publish by: --- Photo :


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டாரா பகுதிகளில் தண்ணீர் குடங்களை சுமந்து செல்லும் தள்ளுவண்டிகளின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் குடிநீருக்கும், பிற தேவைகளுக்கும் தண்ணீரை தேடி மக்கள் நீண்ட தூரம் செல்லும் நிலையில் இருக்கின்றனர்.

 

நாள்தோறும் குடங்களை தூக்கிக்கொண்டு பல கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர் பெண்கள். அதிலும் ஒரு குடமோ அதிகபட்சம் இரண்டு குடங்களோ தான் எடுத்து செல்ல முடியும். இந்த நிலையில் தான் ராமநாதபுரம் மாவட்ட பெண்களுக்கு வரப்பிரசாதமாக வந்தன இந்த இரு சக்கர தள்ளுவண்டிகள். குடங்களை வைப்பதற்கு என்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் இந்த தள்ளுவண்டிகளில் 5 குடங்கள் வரை எடுத்து செல்ல முடியும்.

 

கமுதி, முதுகளத்தூர், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த தள்ளுவண்டிகளை அதிக அளவில் காண முடிகிறது. இப்பகுதி மக்களின் தேவையை உணர்ந்து மதுரையில் இருந்து மூலப்பொருட்களை வாங்கி வந்து தள்ளுவண்டிகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர் இப்பகுதி இரும்பு பட்டறை உரிமையாளர்கள். இவ்வகை தள்ளுவண்டிகள் 3,000 ரூபாயிலிருந்து 3,5000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்களும் இவற்றை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.


Leave a Reply