அமெரிக்காவின் பொருளாதார தடை போன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்ப பல நிறுவன கப்பல்கள் ட்ரேகிங் கருவியை விட்டு ஈரானிடம் எண்ணெய் போக்குவரத்தை தொடர்வதாக இஸ்ரேலை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று கணித்துள்ளது. அணு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதால் கடந்த ஆண்டு நவம்பர் ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா விதித்தது.
சர்வதேச சட்டப்படி ஈரான் உடனான வர்த்தக போக்குவரத்து தவறில்லை என்றாலும் அமெரிக்காவில் வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் வங்கி கணக்கு, சொத்து முடக்கம் நிறுவன அதிகாரிகளுக்கு அமெரிக்காவில் அனுமதி இல்லை போன்ற தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும். விபத்தை தவிர்க்கவும், மீட்பு பணிகளுக்காகவும் 300 டன் எடைக்கு மேல் உள்ள கப்பல்கள் சர்வதேச நீர்வழி தடத்தில் செல்லும் போது சேட்லைட் ட்ரேகிங் கருவியை இயக்கத்தில் வைப்பது அவசியமாகும்.
இந்நிலையில் வாரம் சீனாவிலிருந்து வளைகுடாவை 19 நாட்கள் பயணத்திற்கு பின் அடைந்த சினோ எனர்ஜி 1 என்ற கப்பல் பயண தூரத்தையும், வேகத்தையும் கணக்கிடும் போது சரக்கு பாரமின்றி வேகமாக சென்றதாகவும், பின் 6 நாட்கள் அந்த கப்பல் எங்கு இருக்கிறது என்பதே தெரியாதபடி அதன் மெர்குறி ஏஐஎஸ் ட்ரேகிங் கருவியை கேப்டன் நிர்வாகம் நிறுத்திவிட்டதாகவும், இஸ்ரேலை சேர்ந்த டேங்கர்ஸ் ட்ரேக்கர்ஸ் டாட் காம் நிறுவனம் தெரிவித்தது.
6 நாட்களுக்கு பின் மீண்டும் அதே இடத்திலிருந்து வந்த வழியே திரும்பும் போது அதன் வேகம் குறைவாக இருந்ததால் 30 டன் கச்சா எண்ணெயை எடுத்து சென்று இருக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது. இதே போல் வேறு நிறுவன கப்பல்களின் ட்ரேகிங் கருவியும் ஈரான் துறைமுகத்தை அடையும் முன் அணைக்கபட்டு பின் சரக்கு ஏற்றி வந்த பாதையில் பாதி தொலைவு சென்ற பின் மீண்டும் இயக்கத்திற்கு வருவதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.