இயற்கை உபாதையை கழிக்ககூட தண்ணீரின்றி தவிக்கும் பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீர் இன்றி தவிக்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி ஒன்றில் தண்ணீருக்காக மாணவர்கள் ஏற்படும் அவதி மிக பெரியதாக இருக்கிறது. ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் தலைமையில் இந்த 30 மாணவர்களும் அணிவகுத்து செல்கிறார்கள். வரிசையாக மாணவர்களை இவர்கள் அழைத்து செல்வது பள்ளிக்கு அருகே அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு தான்.

 

திருச்சி மாவட்ட எல்லை முடிவில் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகள் இருந்தும் தண்ணீர் இல்லாததால் மாணவர்களை திறந்தவெளிக்கு ஆசிரியர்களே அழைத்து செல்கிறார்கள். பள்ளியில் சத்துணவு சமையல் செய்வதற்கு சமையல் பணியாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தே தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.

 

நீரை சுத்திகரிக்கும் அமைப்பு இருந்தும் மாணவர்களுக்கு குடிக்க கூட தண்ணீர் தர முடியாத நிலையில் இருப்பதால் மாணவர்களுக்கு பாட்டில்களில் தண்ணீர் தந்து அனுப்புகிறார்கள் பெற்றோர்கள். கடந்த வாரம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இது குறித்து தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கிறார் பள்ளி தலைமை ஆசிரியர்.


Leave a Reply