பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கியது. ஆன்லைன் மூலம் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க 9,500 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க தொழில்நுட்பம் கல்வி இயக்குனர் சார்பில் 46 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.இந்த பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு முழுக்க ஆன்லைனில் நடைபெறுகிறது.

 

4 கட்டங்களாக நடைபெற கூடிய மாணவர் கலந்தாய்வில், முதல் சுற்றுக்கான கலந்தாய்வு இன்று முதல் ஜூலை 8 ஆம் தேதி வரை முதல் சுற்று மாணவர்கள் தங்களுக்கான கலந்தாய்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். சென்னையில் இருக்கக்கூடிய தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் உதவி மையத்தில் பொதுபிரிவு பொறியியல் கலந்தாய்வுக்கான பதிவு கட்டணத்தை செலுத்துவதற்கு மாணவர்கள் சென்றுள்ளனர்.

 

முதல் கட்ட கலந்தாய்வில் கட் ஆஃப் மதிப்பெண் 178 முதல் 200 வரை இருக்க கூடிய மதிப்பெண் பெற்ற 9,500 மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. தாங்கள் சேர விரும்பும் பாடப்பிரிவுகளை இன்று முதலாக பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். ஜூலை 8 முதல் 11 வரை மாணவர்கள் தங்களுக்கு விருப்பபட்டியலில் இருக்க கூடிய 3 கல்லூரிகளை தேர்ந்து எடுக்க வேண்டும்.

 

அந்த 3 கல்லூரிகளையும் பொறியியல் கலந்தாய்வு நடத்தக்கூடிய தொழில் நுட்ப கல்வி இயக்ககம் ஜூலை 13 ஆம் தேதியன்று மாணவர்களின் கட் ஆஃப் மதிப்பெண் மற்றும் அவர்களின் ரேண்டம் எண் அடிப்படையில் அவர்கள் சேர விரும்பக்கூடிய கல்லூரி மற்றும் பாடப்பிரிவு உறுதி செய்யப்படும். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து மூன்றாயிரம் மாணவர்களில் பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.


Leave a Reply