சேலம் மாநகர பகுதிகளில் தடை செய்யபட்ட லாட்டரி சீட்டுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் தடை செய்யபட்ட லாட்டரி சீட்டுகள் பிரபலமாக விற்பனை செய்யப்படுகிறது. காவல் துறை உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினாலும் தொடர்ச்சியாக லாட்டரி விற்பனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பட்டபகலிலே லாட்டரி விற்பனையானது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சேலத்தை பொருத்தவரையில் காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. 3 நம்பர் லாட்டரிகள் மிக பிரபலமாக விற்பனை செய்யபட்டு வந்துள்ளது. அரசின் பிரகாரம் அடிப்படையில் இந்த லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் எந்தவொரு தடையும் இல்லாமல் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
காலை 11 மணி , 1 மணி, 4 மணி, 6 மணி அதே போல கேரளா லாட்டரி சீட்டுகளின் நம்பரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சீட்டில் பரிசு பெறுவோருக்கு 50,000 ரூபாய், ஒரு லட்சம் வரை அளிக்கபடுகிறது.ஒரு சீட்டு 35 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. காவல் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இது முற்றிலும் ஒழிக்கப்படவில்லை.