ஓ‌பி‌எஸ் உள்பட 11 எம்‌எல்‌ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு

ஓபிா‌எஸ் உள்பட 11 சட்ட மன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய திமுக கொறடா சக்கரபாணி, டி‌டி‌வி ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில், ஏற்கனவே நடைபெற்ற விசாரணை விவரங்களை விளக்கினார்.

 

மேலும் ரத்தின சபாபதி, பிரபு உள்ளிட்ட 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான வழக்கும் இதே போன்றது என்பதால் அதையும் சேர்த்து விசாரிக்கலாம் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு சபாநாயகர் இரு தரப்பு வழக்கறிஞர் மற்றும் சட்ட பேரவை செயலாளர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.  இரு தரப்பு வாதமும் வெவ்வேறு தன்மை கொண்டது என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.

 

வாதத்தை தொடர்ந்து 3 சட்ட மன்ற உறுப்பினர்கள் விவகாரத்தை பொறுத்தவரையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக கொடுத்த நோட்டீஸின் அடிப்படையில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். தற்போது அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் திரும்ப பெறப்பட்டதால் விவாகரம் காலாவதி ஆகிவிட்டது என்றும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டு இருப்பதால் வழக்கை தள்ளுபடி செய்யலாம் என்றும் விவாதிட்டார்.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் வழக்கு செல்லாது என்று கூறுவது தொடர்பான ஆவணங்கள் இருக்கின்றனவா? என்று கேள்வி எழுப்பியதோடு, அவை இருக்குமானால் விசாரிக்க வேண்டி இருப்பதாக கூறினர். வழக்கு காலாவதி ஆகிவிட்டது என்பதற்கான ஆவணங்களை வழக்கு விசாரணையின் போது தாக்கல் செய்கிறோம் என்று கூறிய சட்ட பேரவை செயலாளர் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை வரும் செவ்வாய் கிழமை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வழக்கு விசாரணையை ஒத்திவைக்க தங்களுக்கு அதிகாரம் உண்டு தெரிவித்த நீதிபதிகள் இரு வழக்குகளையும் தனித்தனியே விசாரிக்கப்படும் என்று கூறினார்கள்.


Leave a Reply