கோவை சிறுவாணி சாரல், தூறும் பேருரில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு பாத்திய பட்ட பட்டிபெருமான் திருக்கோவில் திருவிழாவின் முதன்மை துவக்க விழா, 29ம் தேதி பேருர் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக திருக்கோவில் கொடி மரம் கொண்டுவர பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் கோவில் அரங்காவலர்கள் கரம் பிடித்து,பட்டக்காரர்கள், அர்ச்சகர்கள், பொதுமக்கள் என அனைவரும் புடைசூழ வேத பஜனைகள் ஓத, விழா குழுவினர் கொடி மர குழியில் பால், பன்னீர், நவ தானியங்கள் தூற்றி திரு மந்திரம் ஓதி, ஒரு வாரம் நிகழும் உற்சவ பெருவிழா நிகழ்ச்சியின் முதன்மை நிகழ்ச்சியான, திருக்கோவில் கொடி மரம் ஏற்றபட்டது.
இதன் தொடர்ச்சியாக வரும் ஒன்பது நாட்களும் தேவேந்திர குல வேளாளர் சமூக மடத்திற்கு சிறப்பு பூஜைகள், பஜனைகள், நாற்று நடுதல், நாற்று எடுத்தல் என உழவு சார்ந்த நிகழ்வுகள் நடைபெற உள்ளது. ஒன்பதாம் திருநாளான 7ம்தேதி சுந்தரமூர்த்தி நாயனார் சப்பரத்தில் எழுந்தருளி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட விவசாய நிலத்தில் எழுந்தருளள் நிகழ்ச்சி யுடன் இக்கோயில் திருவிழா நிறைவு பெற உள்ளது.
முன்னதாக இத்திருக்கோயில் பட்டகாரர் பிரபுகுமார் முன்னிலையில், குத்துவிளக்கேற்றி விழா துவங்கியது, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பட்டிபெருமான், ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் எப்பேர்பட்ட இன்னல்களக அளித்தாலும், உண்ணும் உணவுக்கு மட்டும் இன்னல் வர கூடாது, என இத்திருக்கோயில் பேருர் பகுதியில் எழுப்பப்பட்டு வருவதாகவும், இதன் முக்கிய நிகழ்வாக சித்திரமேழி எனும் நாற்று நடவு உற்சவ பெருவிழா நடைபெற்றது, என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில் பட்டக்காரர்கள் என்றழைக்கப்படும் கிருஷ்ணன், மாசிலாமணி, ராதாகிருஷ்ணன், என பலர் கலந்து கொண்டனர் மேலும் இந்த நிகழ்வில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் அர்ஜுன் சம்பத் அவர்கள் கலந்துகொண்டு இந்த விழாவினை சிறப்பித்தார்.