கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு வரவேற்பு விழா

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கலை,அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு வரவேற்பு விழா சிஎஸ்ஐ ஆலய வளாகத்தில் நடைபெற்றது. கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் பிஷப் அப்பாசாமி கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. சிறப்பு வாய்ந்த இந்த கல்வி நிறுவனத்தில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக இளங்கலை மற்றும் முதுகலையில் முதலாமாண்டு படிக்கும்
மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும்,இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் பட்டப்படிப்பு தங்களின் வாழ்க்கையை உயர்த்தும் எனவும், அதேபோல நாம் கற்கும் கல்வி நம் வாழ்க்கையை மட்டுமல்லாமல் நமது பொருளாதார தரத்தையும் உயர்த்தும் என இந்த நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தப்பட்டது.

அதேபோல,புதிதாக இணைந்துள்ள மாணவ,மாணவிகள் விருப்பத்துடன் கல்விகற்று தாங்கள் விரும்பும் பணிகளில் உயர வாழ்த்துகிறோம் எனவும் கல்வியாளர்கள் தெரிவித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் மிருணாலினி டேவிட், முதல்வர் ஜெமீமா வின்ஸ்டன் மற்றும் கல்லூரியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை வாழ்த்தினர்.


Leave a Reply