60 வயது முதியவரல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யபட்டு கொலை! கொடூர சம்பவம்

சென்னை ஆவடி அடுத்த அந்தோணி நகரை சேர்ந்த ராஜேந்திரன்,செந்தமிழ் செல்வி தம்பதிக்கு 7 வயதில் கார் முகிலன் என்ற மகனும் 4 வயதில் ஷண்மதி என்ற மகளும் உள்ளனர்.கார் முகில் அருகே உள்ள பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.ராஜேந்திரன் வேலைக்கு சென்று விட்ட நிலையில், மாலையில் கார் முகிலனை டியூசனில் விடுவதற்காக தாய் செல்வி, ஷண்மதியை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.

 

திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் குழந்தையை காணவில்லை என பதட்டமான செல்வி அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் குழந்தை கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த செல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே தேடுதல் வேட்டையும் தொடர்ந்து நடைபெற்றது. அக்கம் பக்கத்தினரும் செல்வியுடன் சேர்ந்து குழந்தையை தேடி உள்ளனர். சந்தேகத்தின் பேரில் செல்வியின் வீட்டில் கழிவறைக்குள் சென்று பார்த்த போது சாக்கு பையில் கட்டப்பட்டு வாலியில் மறைக்கப்பட்ட நிலையில் ஷண்மதி சடலமாக கிடந்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். குழந்தையின் உடலிலிருந்த காயங்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்யபட்டு கொலை செய்யபட்டிருப்பது தெரிய வந்தது. பக்கத்து வீட்டுக்காரரான மீனாட்சி சுந்தரம் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் இருந்துள்ளது. அவரது வீட்டுக்குள் போலீசார் சென்று சோதித்த போது அவரது வீட்டின் படுக்கை அருகே குழந்தையின் உடைந்த கம்மல், தலைமுடி போன்றவை கிடந்துள்ளன. மீனாட்சி சுந்தரம் ஆடைகளிலும் ரத்த கரை இருந்துள்ளது.

 

வீட்டையும் அவர் பினால் போட்டு துடைத்து இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் அவரை பிடித்து சென்று விசாரணை நடத்திய போது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை அந்த கொடூரன் ஒப்புக்கொண்டுள்ளான். முருக்கு மீசையுடன் உள்ள 60 வயதான மீனாட்சி சுந்தரம் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். செல்வியின் உறவினரான இவர் கொலை செய்யபட்ட ஷண்மதிக்கு பெரியப்பா முறை. சம்பவ தினத்தன்று வீட்டில் தனியாக இருந்த குழந்தையை பார்த்த மீனாட்சி சுந்தரம் விளையாடலாம் வா என தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அப்போது குழந்தை இறந்துவிட சடலத்தை சாக்கு பையில் கட்டி வாலியில் மறைத்து செல்வியின் கழிவறையில் வைத்துள்ளார். குழந்தையை காண வில்லை என செல்வி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற போது எதும் தெரியாதது போல் சுந்தரமும் அவருடன் சென்றுள்ளார். பின்னர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய பிறகு, போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் சரியாக பதில் அளிக்காமல் இருந்ததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 

இதனை அடுத்து போலீசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்திய போது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இவர் தனது மருமகளிடமே தவறாக நடக்க முயற்சித்ததாகவும் அதனால் அவர்கள் தனி குடித்தனம் சென்றுவிட்டார்கள் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


Leave a Reply