ஜி‌எஸ்‌டி குளறுபடிகளுக்கு பட்ஜெட்டில் தீர்வு வேண்டும்! அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை

ஜி‌எஸ்‌டி வரி நடைமுறையில் இருக்கும் பல்வேறு குளறுபடிகளுக்கு வரும் பட்ஜட்டில் தீர்வு காண வேண்டும் என்று வணிகர்கள் மற்றும் சிறு தொழில் துறையினர் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். இந்தியாவின் மிகப் பெரிய வரி சீர் திருத்தமாக கருதப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

 

இந்த வரி முறை அமலாகி 2 ஆண்டுகள் ஆகியும் இதில் உள்ள பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காண வேண்டி இருப்பதாக கூறுகின்றனர் வணிகர்கள். வணிகர்களை தவறான கண்ணோட்டத்தோடு அணுகும் போக்கு இருப்பதாகவும், அது மாற்றி கொள்ளப்பட வேண்டும் என்பதும் அத்தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் ஈவே பில் எனப்படும் பயண வழி ரசீது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் தெளிவு இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

 

ஜி‌எஸ்‌டி நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் நீடிப்பதாக தொழில் துறையினரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஜி‌எஸ்‌டி கவுன்சில் கூட்டம் அவ்வப்போது கூடி நடைமுறை சிக்கல்கள் குறித்த புகார்களுக்கு தீர்வு கண்டுவருகிறது. எனினும், பல்வேறு முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காததுடன் அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக உள்ளது என்று வணிகர்களும், தொழிற்துறையினரும் கூறுகின்றனர்.


Leave a Reply