தமிழகம் முழுவதும் 61 ஐ‌பி‌எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Publish by: --- Photo :


தமிழகம் முழுவதும் 61 ஐபிம‌எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழகத்தில் புதிய சட்ட ஒழுங்கு டி‌ஜி‌பி அறிவிக்கப்பட இருக்க கூடிய சூழ்நிலையில் தற்போது 61 ஐபிட‌எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. குறிப்பாக இதில் 16 ஐபி்‌எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.

 

மேலும், சென்னையில் இருக்கக்கூடிய காவல் துறை துணை ஆணையர்கள் இதில் பலர் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். அரவிந்தன், திருவள்ளூர் மாவட்ட எஸ்‌பி யாக மாற்றப்பட்டு இருக்கிறார். இது மட்டுமில்லாமல் சென்னையில் இருக்க கூடிய நில அபகரிப்பு பிரிவில் இருக்க கூடிய எஸ்‌பி நாகஜோதி துணை ஆணையராக சென்னை மத்திய குற்ற பிரிவிற்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.

 

மேலும் சென்னை மத்திய குற்றபிரிவில் இருக்க கூடிய செந்தில் குமார், சென்னை காவல் துறை நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். அதே போல மயிலாப்பூர் காவல் துறை துணை ஆணையர் மயில் வாகனன் , போக்குவரத்து காவல் துறை துணை ஆணையருக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக இருக்க கூடிய பிரபாகர், பரங்கிமலை காவல் துறை துணை ஆணையராக தற்போது மாற்றப்பட்டு இருக்கிறார்.

 

பரங்கிமலை துணை ஆணையராக இருக்க கூடிய முத்து சாமி , அண்ணா நகர் காவல் துறை துணை ஆணையருக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட 61 ஐபிய‌எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. புதிய சட்ட ஒழுங்கு டி‌ஜி‌பியாக அறிவிப்பு வெளியாக இருக்க கூடிய சூழலில் தான் இந்த 61 ஐபிற‌எஸ் அதிகாரிகளும் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் இருக்க கூடிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.


Leave a Reply