கோவை மாவட்டம் செம்மாண்டம்பாளையத்தில் கிராம சபை கூட்டத்தில் விளைநிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்க கூடாது என அளித்த மனுவின் அடிப்படையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாவட்டம் செம்மாண்டம்பாளையத்தில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் குடிநீர், சாலை,போக்குவரத்து , கழிப்பட வசதி என பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக மக்கள் அளித்த மனுவின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. அதே போன்று ஏர்முனை அமைப்பு சார்பில் விளைநிலங்களின் வாயிலாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டது.மனுவில் விளைநிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க கூடாது.
அதற்கு பதிலாக சாலைகளின் வழியே புதை வடமாக கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனுவினை ஏற்ற ஊராட்சி நிர்வாகம் ஒருமனதாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. மொத்தம் 26 தீர்மானங்கள் செம்மாண்டம்பாளையம் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது விளைநிலங்களின் வழியே உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.