45 வருடங்கள் இல்லாத வேலை வாய்ப்பின்மை கோவை

Publish by: --- Photo :


இந்தியா எதிர் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் வேலைவாய்ப்பின்மையும் ஒன்று. 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் பட்ஜட்டில் எங்களுக்கு தேவையான ஊக்கம் தாருங்கள்.வேலை வாய்ப்பை அதிகரித்து காட்டுகின்றோம் என்கின்றனர் கோயம்புத்தூர் தொழிற்துறையினர். விவசாயம், ஜவுளி துறைக்கு அடுத்த படியாக நாட்டில் அதிகம் பேரின் வாழ்வாதாரமாக திகழ்வது எம்‌எஸ்‌எம்‌இ எனப்படும் நடுத்தர மற்றும் சிறு தொழில் துறை.

 

சுமார் 2 கோடி பேர் இத்துறையில் வேலை வாய்ப்பு பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடுத்தர மற்றும் சிறு தொழில் துறையினருக்கு மத்திய பட்ஜட்டில் போதிய ஊக்கம் தரப்படும் பட்சத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரித்து காட்டுவோம் என்கின்றனர் கோவை தொழிற் துறையினர்.நடுத்தர மற்றும் சிறு தொழில் வளர்ச்சிக்கென தனி கொள்கை அமைத்து அதற்கென முன்னுரிமை தர வேண்டும் என்கின்றனர் கோவை தொழிற் துறையினர்.

 

மேலும் 3 கோடி ரூபாய் வரை கடன், அப்ப்ரண்டிஸ் எனப்படும் பணி பழகுனர்களை 10 பேருக்கு மேல் பணியமர்த்த அனுமதி , சென்னை , மும்பை போன்ற நகரங்களுக்கு அதிக அளவில் மற்றும் விமானம் வசதி என பல கோரிக்கைகளை இத்துறையினர் வைக்கின்றனர். நடுத்தர சிறு தொழில் துறையினர் தவிர மிகச்சிறிய அளவில் தொழில் செய்யும் குறுந்தொழிலும் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பை தருகிறது. இத்துறையினரும் பல்வேறு விதமான கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள்.

 

கோவை போன்ற நகரங்களில் குறுந்தொழில் துறையினருக்கு என தனி தொழில் பேட்டை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இவர்கள் முன் வைக்கின்றனர். மேலும் மத்திய பொது துறை நிறுவனங்களுக்கு தேவையான மூல பொருட்களில் 20 சதவீதம் சிறு குறுந்தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.