புதிய பாடப்புத்தகங்களில் இருந்து சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்குக! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழக அரசின் புதிய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்தது என்ற தகவலை நீக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. புதிய பாடத்திட்டம் என்பது கடந்த ஆண்டு 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கும் இந்த ஆண்டு இதர வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய புத்தகங்கள் என்பது தற்போது தான்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தன.

 

இதில் சில விஷயங்கள் தவறுதலாக அச்சடிக்கப்பட்டவை சர்ச்சைக்குரிய விஷயங்களாக ஊடகங்களில் வந்தவை இது போன்ற விவகாரங்களை நீக்கவும்,அதற்கு பதிலாக சேர்க்க வேண்டிய வரிகள் என்ற பட்டியலை பள்ளிக்கல்வித் துறை , முதன்மை கல்வி அலுவலகர்களுக்கும் அனுப்பி இருக்கிறது. அதன் படி, குறிப்பாக இந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக உள்ளது என 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

அந்த வரிக்கு பதிலாக இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மொழியும், இந்தி மொழி பேசப்படாத மாநிலங்களில் மாநில இணைப்பு மொழியாக ஆங்கிலமும் இருக்கும் என இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது என மாற்ற வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்கள். இதே போன்று வைகுண்ட சாமிகள் பாடம் குறித்த பல்வேறு வரிகளை மாற்றி அமைக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் இந்த வரிகள் நீக்கப்பட்டு புதிதாக வேறு வரிகள் சேர்க்கபட வேண்டும் என்ற விஷயமும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

 

மேலும், 7 ஆம் வகுப்பு பாடப் புத்தகம் தமிழ் புத்தகத்தில் முத்து ராமலிங்கத்தேவர் குறித்த பாடத்திலும் ஒரு சில வரியை நீக்க கூறியுள்ளனர். இது போன்ற நீக்க பட வேண்டிய விஷயங்களையும், சேர்க்கபட வேண்டிய விஷயங்களையும் தற்போது இந்த ஆண்டை பொருத்த வரையில் ஆசிரியர்களே பிரிண்ட் அவுட் எடுத்து அந்த புத்தகத்தில் ஒட்டியோ அல்லது நீக்கியோ நடத்த வேண்டிய சூழலில் ஆசிரியர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு புதிதாக இந்த மாற்றங்கள் செய்யபட்டு அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply