வருமான வரி சலுகைகள் – தொழில் அமைப்புகளின் கோரிக்கைகள்

ஒவ்வொரு பட்ஜட்டிலும் நடுத்தர வர்க்க மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக வருமான வரி சலுகையும் இருக்கும். இந்த முறை பட்ஜட்டில் தனி நபர் வருமான வரியில் எது போன்ற சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்று தொழில் அமைப்புகள் மத்திய நிதி அமைச்சகத்திடம் அளித்த கோரிக்கைகள்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, அஞ்சலக சேமிப்பு, ம்யூச்சுவல் பண்ட், காப்பீடு ப்ரீமியம் , வீட்டுக்கடன் அசல் உள்ளிட்ட செலவினங்களுக்கு 80சி பிரிவின் கீழ் தற்போது ஒன்றரை லட்சம் ரூபாய் வரையில் கழிவு வழங்கப்படுகிறது.

 

இதை 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என தொழில் நிறுவனங்களின் சங்கமான அசோச்சம் கோரியுள்ளது. மேலும், மாத சம்பளதாரர்களுக்கு ஊதியத்தில் 50,000 ரூபாய் நிலையான கழிவு. அதாவது,ஸ்டாண்டர்ட் டெடெக்சன் என்ற பெயரில் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று உயர்த்தப்பட வேண்டும் என்று அசோச்சம் கூறியுள்ளது.

 

முன் கூட்டியே நோய் தடுப்புக்கான மருத்துவ பரிசோதனைகளுக்கு செலவு செய்யும் தொகையில் 5,000 ரூபாய் வரை தற்போது 80டி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வரம்பை 20,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என இந்திய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பான பிக்கி கேட்டு கொண்டுள்ளது. தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பை இரண்டரை லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் சில ஆண்டுகளாகவே கோரிக்கை இருந்து வருகிறது.

 

எனினும் இம்முறையும் அக்கோரிக்கை ஏற்கபட வாய்ப்பில்லை என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த கோரிக்கையை ஏற்பது, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்திற்கு எதிராக அமையும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர்.


Leave a Reply