திருவண்ணாமலையில் விலையில்லா மடிக்கணினி வழங்க கோரி பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சாலை மறியல்

Publish by: --- Photo :


திருவண்ணாமலையில் விலையில்லா மடிக்கணினி வழங்க கோரி பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்கலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த 2018 ஆம் ஆண்டு 165 மாணவர்களும், 2018 -2019 ஆம் ஆண்டில் 143 மாணவர்களும் பயின்று உள்ளனர்.

 

2019 -2020 ஆம் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்க இருப்பதாகவும் , தங்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் எனவும் கூறி பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் வந்தவாசி மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து முன்னாள் மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.