மதம் மாறிய தன் மகளை மீட்டு தரும்படி தாய் கோவை எஸ்.பி யிடம் கண்ணீருடன் மனு

கோவை மாவட்டம் அரசூர் பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம். கணவரை பிரிந்து தனது தம்பி வீட்டில் வசிக்கும் முனிரத்தினத்திற்கு பூங்கோதை என்ற 22 வயது மகள் இருக்கிறார். கோவை தனியார் கல்லூரியில் படிப்பை முடித்த பூங்கோதை, திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பதாக கூறி தனது நண்பர்கள் பாரதி மற்றும் சாராவுடன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம் வீட்டிற்கு வந்த பூங்கோதை கழுத்தில் சிலுவை அனிந்துள்ளார். முனிரத்தினம் விசாரித்த போது, தான் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி மீண்டும் யாரிடமும் கூறாமல் வீட்டை விட்டு பூங்கோதை வெளியேறி இருக்கிறார்.இது குறித்து முனிரத்தினம் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பூங்கோதையை போலீசார் அழைத்து விசாரித்த போது சுய விருப்பத்தின் படியே மதம் மாறியதாக கூறி இருக்கிறார்.

மேஜர் பெண் என்பதால் போலீசாரும் பூங்கோதை விருப்பப்படியே மீண்டும் திருச்சி அனுப்பி வைத்தனர்.இதனை தொடர்ந்து மதம் மாறிய தனது மகள் பூங்கோதையை மீட்டு தரும்படி முனிரத்தினம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத் குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.மதம் மாறிய மகளை மீட்டுத்தர வேண்டி கண்ணீருடன் தாய் மாவட்ட எஸ்.பி யிடம் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply