ஃபேஸ் புக் புகைப்படம்.. மார்ஃபிங் மர்ம நபர் மிரட்டல்

ஃபேஸ்புக்கில் பதிவிட்ட குடும்ப புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மேஸ்ஸஞ்சரில் அனுப்பி மர்ம நபர் மிரட்டல் விடுப்பதாக சென்னை சைபர் க்ரைம் போலீசில் ஒரு தம்பதி புகார் அளித்துள்ளது. சென்னை பெருங்குடியை சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவருக்கு அம்சத் பேகன் என்ற பெயரில் உள்ள மர்ம நபர் ஒருவர் ஃபேஸ்புக்கில்நண்பனாகி உள்ளான்.

 

இந்த நிலையில் அண்மையில் தனது குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஓட்டுநர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சில நாட்கள் கழித்து அம்சத் பேகன் கணக்கை இயக்கும் நபர் மேஸ்ஸஞ்சர் வாயிலாக ஒரு புகைப்படத்தை ஓட்டுநருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் தனது குடும்ப புகைப்படத்தில் இருக்கும் மனைவியின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ந்து போனார் ஓட்டுநர்.

 

உடனடியாக தனது மனைவியுடன் காவல் ஆணையரகம் சென்ற அவர் இது குறித்து சைபர் க்ரைம் போலீசில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். சித்தரித்த புகைப்படத்தை வைத்து கொண்டு தங்களை மிரட்டுவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பல புகைபடங்கள் தன்னிடம் இருப்பதாகவும், இதே போல் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டுவதாகவும் பிரபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

 

பாலியல் தொந்தரவுக்காகவே அந்த மர்ம நபர் இவ்வாறு செய்வதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களை போல் வேறு யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே புகார் அளிக்க முன் வந்து இருப்பதாகவும் , மர்ம நபரை கண்டு பிடித்து கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஃபேஸ்புக்கில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.


Leave a Reply