சபா நாயகரை நீக்குவது நோக்கம் அல்ல முதலமைச்சரை நீக்குவது தான் நோக்கம் என ஸ்டாலின் கூறுகிறார். சபா நாயகருக்கு எதிராக திமுக கொண்டு வரும் தீர்மானம் ஜூலை 1 ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக சபா நாயகரை நீக்குவதற்கு அவசர அவசரமாக முயன்ற திமுகவினர் தேர்தலுக்கு பிறகு சபா நாயகருக்கு எதிரான குரலை மட்டுபடுத்தியிருக்கிறார்கள்.
சட்ட பேரவையை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கும் போதும் , தண்ணீர் பிரச்சனையை மட்டுமே அறிக்கையில் குறிப்பிடுகிறாரே அன்றி ஸ்டாலின் சபா நாயகரை பற்றி பேசுவதில்லை. பத்திரைக்கையாளர்கள் சபா நாயகரை பற்றி கேள்வி எழுப்பினாலும் வெயிட் அண்ட் ஷீ என்று மட்டுமே குறிப்பிடுகிறார். எதேனும் திட்டத்தை திமுக தலைவர் வைத்து இருக்கிறாரோ என்று ஆராய்ந்து கொண்டிருக்கும் போதே சபாநாயகரை நீக்குவது நோக்கம் அல்ல. முதல்வரை நீக்குவது தான் நோக்கம் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையிலேயே ஸ்டாலின் தனது குறியை சபா நாயகர் மீது இருந்து முதல்வர் பக்கம் திருப்பி விட்டாரா? அல்லது சபா நாயகரை தன்னால் வீழ்த்த முடியாது என்கிற காரணத்தால் சபா நாயகர் தனது நோக்கம் அல்ல என மலுப்புகிறாரா? தெரியவில்லை.மேலும், சபா நாயகர் மீது தீர்மானம் கொண்டு வந்ததே தினகரன் ஆதரவு எம்எல்ஏ க்களை தகுதி நீக்கம் செய்யவிடாமல் தடுக்க தான் என்று கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இடை தேர்தலில் ஆட்சியை தக்க வைக்கும் அளவு வெற்றியை எடப்பாடி பெற்று விட்ட பிறகு அந்த 3 எம்எல்ஏக்களால் திமுகவிற்கு பயனில்லை.
சபா நாயகரை குறி வைப்பதிலும் எந்த அர்த்தமும் இல்லை என திமுக நினைக்க தொடங்கி இருக்கிறதா? என்றும் சந்தேகிக்கிறார்கள். தினகரனோ எம்எல்ஏக்களோ கை கொடுத்தால் மட்டும் போதாது. தினகரனுக்கு இருக்கும் ஸ்லீப்பர் செல்கலோ அல்லது திமுகவிற்கு வர துடிப்பதாக கூறப்படும் அதிமுக எம்எல்ஏக்களோ, ஸ்டாலினுக்கு ஸ்டாலினுக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே சபா நாயகரை வீழ்த்துவது சாத்தியம்.
இன்னும் ஒன்றரை ஆண்டு கால ஆட்சி இருக்கையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலினை நம்பி எதற்காக வரபோகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. அத்துடன் சபா நாயகருக்கு எதிரான தீர்மானத்தில் திமுக தோற்று விட்டால் அது ஸ்டாலினுக்கு பின்னடைவாக அமையுமா? ஏற்கனவே பின்னடைவை சந்தித்து இருக்கும் டிடிவி யுடன் ஸ்லிப்பர் செல்களே இல்லை என்பது உறுதிப்படுத்தபடுமா? என்பதை எல்லாம் அறிய வேண்டியிருக்கிறது.