கோவையில் இளம் பெண்ணுக்கு கத்தி குத்து

கோவையில் கணினி பயிற்சி மையம் ஒன்றிலிருந்து வெளியே வந்த இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை ஆர்‌எஸ் புரம் மாநகராட்சி கலையரங்கம் அருகில் தனியார் கணினி பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் பயிற்சி வகுப்பில் இருந்து வெளியே வந்த 20 வயதான இளம் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் அணுகி உள்ளார்.

 

இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோதே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த மாணவியை அவர் குத்தியுள்ளார். கத்தியால் குத்தும் போது அருகில் உள்ள சக மாணவர்கள் தடுத்துள்ளனர். மாணவர்கள் மட்டுமின்றி அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த மாணவியும், அவனும் லேசான காயங்களுடன் தப்பித்து உள்ளனர்.

 

இது போன்ற சம்பவம் பொது மக்கள் மற்றும் சக மாணவர்களால் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை அறிந்து காவல் துறையினர் வந்து விசாரித்த போது இந்த இருவரும் கேரள மாநிலத்தவர் என தெரிய வந்துள்ளது. இருவரும் அங்கு கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்ததாகவும், தொடர்ந்து காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த இளம் பெண் அந்த இளைஞரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். கோவையில் அந்த இளைஞர் பணியாற்றி வந்துள்ளார்.

 

தொடந்து பெண்ணை கண்காணித்து வந்த இளைஞர் தன்னிடம் பேச மறுத்ததால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். அங்கிருந்த மாணவர்களும்,பொது மக்களும் சுரேஷை லாவகமாக பிடித்ததனால் உயிரிழப்பு தடுக்கப்பட்டு உள்ளது. போலீசார் சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த பெண்ணுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


Leave a Reply