இரண்டரை வயது குழந்தை மர்மமான முறையில் மரணம்: உறவினரை கைது செய்த போலீசார்

கோவையில் கனக ராஜ் – காஞ்சனா தம்பதியினரின் இரண்டரை வயது குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் துப்பு துவங்கியுள்ளது. காஞ்சனாவின் உறவினர் ரகுநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். கனக ராஜ் மற்றும் காஞ்சனாவின் இரண்டரை வயது குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இரண்டு தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரபடுத்திய கோவை போலீசார் காஞ்சனாவின் பெரியப்பா மகன், அதாவது காஞ்சனாவின் தம்பியான ரகு நாதனை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

ரகுநாத்
ரகுநாத்

அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். இவர் பண்ணை வீட்டில் மாடுகளை கவனிப்பதாகவும், பால் கறக்க 4 மணிக்கு எழுந்து இருக்கும் போது குழந்தையை கிணற்றுக்கு எடுத்து சென்று உள்ளார். உடனடியாக குழந்தை கத்தியதால் வாயை பொத்தி இருக்கிறார். அதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக குழந்தையை கிணற்றில் வீசி இருக்கிறார். இது கோவையில் பெரும் அதிர்ச்சிகரமான சம்பவமாக பார்க்கப்படுகிறது.

 

அந்த வீட்டில் வசித்து வரும் பூபதி என்பவரிடமும் காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. நேற்றே காவல் துறையினர் அவரை சந்தேக கோணத்தில் தான் பார்த்தனர். அவன் குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளான் என்றும், ஏற்கனவே கனக ராஜ் , காஞ்சனா தம்பதி மீது கோவமாக இருந்ததாகவும், அதன் முன் விரோதம் காரணமாகவே கொலை நடத்திருக்ககூடும். உறவினரே இது போன்ற குற்ற செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை அளிக்கிறது.


Leave a Reply