மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற தங்கங்களுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு

Publish by: --- Photo :


சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கோவையை சேர்ந்த வீரர்கள் நான்கு பேர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.சென்னை முகப்பேறு பகுதியில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கடந்த இரு தினங்களாக நடைபெற்று வந்தது.இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து 12 மாவட்டங்களை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.ஜூனியர் மற்றும் சீனியர் என ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் பல்வேறு பிரிவுகளாக புள்ளிகள் வழங்கப்பட்டன.

 

அதில் கோவையை சேர்ந்த கௌதம்,பைசான்கான்,திபின்,ஹர்ஷிதா மற்றும் மிதுன் ஆகிய ஐந்து பேரும் தங்க பதக்கம் வென்றனர்.மேலும், அன்சர் பாபு,அஷ்வத்,அஸ்விதா ஆகிய மூவரும் வெள்ளிப்பதக்கமும் ஹரிஸ்,தீபிகா,வருண் சார்லஸ் ஆகிய மூன்று பேரும் வெண்கல பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர்.இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னையை எதிர்கொண்ட கோவை வீரர்கள் இரண்டாமிடம் பிடித்தனர்.இந்த நிலையில் வெற்றி பெற்று பதக்கம் மற்றும் கோப்பைகளுடன் ரயில் மூலம் கோவை வந்த அவர்களுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Leave a Reply