தொழில் நுட்ப கோளாறால் கணினி ஆசிரியர் தேர்வை எழுத முடியாமல் பலர் தவிப்பு

தமிழகத்தில் நடைபெற்ற கணினி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தகுதி தேர்வை தொழில் நுட்ப கோளாறு காரணமாக பலர் எழுத முடியாமல் தவித்தனர். இதனையடுத்து தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கணினி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கே‌எல்‌என்.பொறியியல் கல்லூரி, ஐடி் கல்லூரி மற்றும் பாண்டியன் சரஸ்வதி கல்லூரிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

 

ஆனால் தேர்வார்களுக்கு போதுமான அறையும், கணினி வசதியும் ஒதுக்கப்பட வில்லை. இதனால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குளறுபடுகள் சரி செய்யபட்ட பின்னர் அவர்கள் தேர்வு எழுத சென்றனர். நாகையில் தொழில் நுட்ப பிரச்சனையால் 20 க்கும் மேற்பட்டோர் கணினி ஆசிரியருக்கான கணினி தேர்வை எழுத முடியாமல் தவிர்த்தனர்.

 

இதனால் கோவத்துடன் தேர்வு மையத்தை விட்டு வெளியேறினர். அவர்களிடம் போலீசார் சமாதான முயற்சியில் ஈடுபட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. சர்வர் பிரச்சனை சரி செய்யபடாததல் பின்னர் அவர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதே போன்று நெல்லை மாவட்ட தேர்வு மையத்தில் போதிய கணினிகள் மற்றும் தேர்வுக்கான மென்பொருள் இல்லாததால் தேர்வு எழுத வந்த 32 பேர் அவதிக்கு உள்ளாகினர்.

 

தேர்வு நேரம் தொடங்கிய பின்பும் அவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சங்கோட்டில் சர்வர் வேலை செய்யாததால் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் தவித்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் போலீசார் பேச்சு வாத்தை நடத்தியத்தை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

 

இதற்கிடையே தேர்வு எழுத முடியாதவர்கள் அச்ச பட தேவையில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தொழில் நுட்ப கோளாறால் தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் தேர்வு நடக்கும் நாள், தேர்வு நடக்கப்படும் இடம் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


Leave a Reply