டெல்லியில் நடந்த தேசிய அளவிளான காரத்தே போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை.

தமிழ்நாடு மாநில கராத்தே சங்கம் சார்பில் மாநில அளவிலான காரத்தே போட்டி கோவை மாவட்டம் கிளஸ்டர் மீடியா கல்லூரியில் நடைபெற்றது. இது குறித்து ஆசியன் காரத்தே பெட்ரேசன் தலைமை பயிற்சியாளர் அறிவழகன் செய்தியாளரிடம் கூறுகையில் டெல்லியில் உள்ள தல்கதோர உள்விளையாட்டு அரங்கில் கராத்தே அசோசியஷன் ஆஃப் இந்தியா சார்பில் கடந்த ஜூன் 10 முதல் 13 வரை நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே சாம்பியன் போட்டியில் தமிழகத்தில் இருந்து 40 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

இதில், கோவை மாவட்டம் சார்பில் ஏழு பேர் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீ ஜெயேந்திரா சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவிகளான பூஜா மற்றும் மைதிலி ஆகியோர் சப் ஜுனியர் பிரிவில் இருவரும் குமிட்டே (சண்டை) பிரிவில் மூன்றாமிடமும், குரு சரண் பப்ளிக் பள்ளியில் பயிலும் யுவன் குமிட்டே(சண்டை) பிரிவில் மூன்றாமிடமும் வென்று 3 வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறினார்.

 

இதில் தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சாய் புரூஸ், ஏசியன் கராத்தே பட்ரேஷன் நீதிபதி மற்றும் தலைமை பயிற்சியாளர் அறிவழகன், பயிற்சியாளர் நாசர்தீன் மற்றும் வினோத், பள்ளியின் தாளாளர் தனலக்ஷ்மி ஜெயசந்திரன், தலைமை ஆசிரியர்கள் கீதாசுதர்சன், அனுராதா மற்றும் சிறப்பு விருந்தினர் சுவாமி விவேகானந்தா கேந்திரிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Leave a Reply