முன்னணி கட்டுமானதாரர்களுடன் இணைந்து சிண்டிகேட் வங்கி நடத்தும் மாபெரும் வீட்டுக்கடன் முகாம் கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.இது குறித்து கோவை சிண்டிகேட் வங்கியின் மண்டல மேலாளர் சிவராமன் செய்தியாளர்களை சந்தித்த போது, கோவையில் வீட்டுக்கடன் முகாம் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது.
இந்த முகாமில் பொதுமக்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கு ஏளிய முறையில் அனைத்து வகையான ஏற்பாடுகளையும் சிண்டிகேட் வங்கி செய்துள்ளது. புதிய திட்டமாக 70 வயதினரும் வீட்டு கடன் பெற்றுக்கொள்ள தகுதி உள்ளது. அதுமட்டுமல்லாமல் 30 ஆண்டுகள் அல்லது 80 வயது வரை கடனை திரும்பச் செலுத்தலாம். சுலபமான உடனடி ஒப்புதல், மிகக்குறைந்த பரிசீலனைக் கட்டணம், முன்கூட்டி செலுத்தும் தொகைக்கு கட்டணம்செலுத்த தேவை இல்லை, பிரதம மந்திரி திட்டத்தின்கீழ் ரூ.2.67 லட்சம் மானியம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.
மேலும், இம்முகாமில் ப்ரோவிடென்ட், கோவை லைஃப் ஸ்டைல், லெமன் ட்ரீ, ஷோபா டேவலோப்பர்ஸ், விஎஸ்கே பில்டர்ஸ் போன்ற முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்குபெற்று தங்கள் கனவு இல்லங்களை தேர்வு செய்ததாக அவர் கூறினார்.