திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின் தடையால் நோயாளிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த மருத்துவமனையில் நாகப்பட்டினம், வேதாரண்யம் மற்றும் மயிலாடு துறை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் எந்த முன் அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின்சாரம் தூண்டிக்கபடுவதாக கூறுகின்றனர்.
இதனால் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் உள்ள உபகரணங்கள்பழுதாகி உள்ளதாகவும், சிகிச்சை பெற வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் புகார் எழுந்து உள்ளது. 10 நிமிடத்திற்கு ஒரு முறை மின் தடை ஏற்பட்டு அந்த இடமே இருளாக மாறுவதாகவும், மின் தடைஇவ்வாறு இருந்தால் உயர் தர சிகிச்சையில் இருக்கும் பொழுது இந்த தட்டுபாட்டினால் மிக பெரிய அளவில் நோயாளிகளுக்கு இறப்பை ஏற்படுத்துகிற நிலை வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பொது மக்கள் கூறினர்.
ஸ்கேன் செய்யும் இடத்திலும், ஆய்வாகத்தில் சோதனைக்கு கொடுக்க செல்லும் போதும் மின் தட்டுபாடை காரணமாக கூறுவதாக சொல்கிறார்கள். டயாலிசிஸ் செய்யும் போதும் மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த நிலையில் நோயாளிகள் அங்கு சிகிச்சை எடுப்பது அபாயகரமான நிலையில் உள்ளது. தொடர் மின் தடையால் தண்ணீர் கிடைப்பதில் கூட சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அருகே துணை மின் நிலையம் அமைத்து மின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே போது மக்களின் கோரிக்கை.