உலகின் மிக அழகற்ற நாய் என்ற பட்டத்தை இந்த ஆண்டு ஷ்கேம்ப் த டிராம்ப் என்ற நாய் பெற்றுள்ளது. அமெரிக்காவின் கேலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெட்டாலுமா என்ற நகரில் ஆண்டுதோறும் அழகற்ற நாய்களுக்கான போட்டி நடைபெறும். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த, வித்தியாசமான நாய்கள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் மிகவும் அருவருப்பான நாய்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு அளிக்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு 19 நாய்கள் பங்கேற்ற போட்டியில் லாசின்லஸ் நகரை சேர்ந்த மெரான்ஸ் என்பவர் பராமரித்து வரும் ஷ்கேம்ப் த டிராம்ப் என்ற நாய் பட்டத்தை பெற்றுள்ளது. நாய்க்கு கோப்பையுடன் பரிசு தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நீளமான நாக்குடன் பார்க்க அருவருப்புடன் இருந்த ஷசா என்ற புல் டாக் வகை நாய் இந்த பட்டத்தை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.