குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்

தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திமுக கொறடா சக்கர பாணி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடத்துடன் கலந்து கொண்டனர். தண்ணீர் பிரச்சனையை தீர்க்காத அதிமுகவை கண்டித்து திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என் . நேரு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

 

திருவண்ணாமலையில் திமுக எம்‌எல்‌ஏ.வேலு தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 35 கூட்டு குடிநீர் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி, மக்களுக்கு ஒரு கூடம் 10 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். அந்த அவல நிலை எல்லாம் போக்கி தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துவதாக சக்கரபாணி கூறினார்.

 

இன்று ஒருவாரம் ஆகியும் மாவட்ட ஆட்சி தலைவர்கள் வளர்ச்சி மன்ற கூட்டத்தை நடத்த வில்லை என்றும், குறிப்பாக 7 சட்ட மன்ற தொகுதிக்கு வளர்ச்சி மன்ற கூட்டத்தை கூட்டாமல் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் கூட்டத்தை நடத்தி அங்கே உள்ள திண்டுக்கல் மாவட்ட வனத் துறை அமைச்சர், திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சமில்லை என்று அவர் கூறியதாகவும், திமுக கொறடா சக்கர பாணி கூறினார்.

 

திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் காலி குடங்களுடன் பங்கேற்றனர். மாவட்ட தலை நகரங்களில் அமைதியான முறையில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


Leave a Reply