சிங்கப்பூரில் ஸ்டாலின் ஜாலி…அமைச்சர் செல்லூர் ராஜீ பேச்சால் தலைவலி..!

நீர் ஆவியாகமல் நீர் நிலைகளை பாதுகாப்பது பற்றி எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் தான் ஆலோசனை சொல்ல வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.அதிமுக தலைமை உத்தரவிட்டதன் படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மழை வேண்டி நாளை யாகம் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டார்.

 

மதுரையில் உள்ள 65 கன்மாய்களிலும் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இங்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் தெரிவித்தார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு திட்டம் கொண்டு வந்தது போல் இன்றைய முதல்வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தொலைநோக்கு திட்டங்களில் சிந்தித்து செயல்படுத்துவார் என்றும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

 

தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி போராட்டம் நடத்துமாறு திமுகவிற்கு உத்தரவிட்ட அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சிங்கப்பூர் சென்று உல்லாசமாக பொழுதை கழித்துள்ளதாக செல்லூர் ராஜு குற்றம் சாட்டினார்.


Leave a Reply