கோவையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். குமாரபுரம் பகுதியில் பெற்றோர் கூலி வேலைக்கு சென்றதால் அவர்களது 13 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்து அதே பகுதியை சேர்ந்த வினித் குமார் என்பவன் வீட்டிற்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்.

 

அப்போது சிறுமி கூக்குரல் எழுப்பியதால் வினித் குமார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து அவர்கள் மகளிர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் வினித் குமாரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


Leave a Reply