பரோல் கோரும் கொலைகார சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்

ஹரியானாவில் மோசடி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பரோல் கூறி விண்ணப்பித்துள்ளார். பக்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தது, அதை வெளியிட்ட பத்திரிக்கை செய்தியாளரை கொன்றது உள்ளிட்ட பல்வேறு குற்றம் சாட்டபட்ட குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு கடந்த ஆண்டு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் கைதியாக உள்ள இவர் தோட்ட வேலைகளை பார்த்து வருகிறார்.

 

தனது சொந்த ஊரில் நிலம் தரிசாக கிடப்பதாகவும் , அதில் தாம் விவசாயம் செய்ய விரும்புவதாகவும் கோரி குர்மீத் பரோல் கூறியுள்ளார். பரோல் கோரிக்கையை சிறை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளது. மாவட்ட நிர்வாகம் அனுமதித்த பின் அந்த பரோல் நிர்வாகம் ஹரியானா அரசின் கவனத்திற்கு செல்லும்.


Leave a Reply