திமுகவினர் நடத்தும் மது ஆலைகளை மூடினாலே தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடும்- தமிழிசை

தமிழகத்தில் மக்கள் தண்ணீருக்காக தவித்து வரும் நிலையில் உதவி செய்ய வேண்டுமே தவிர திமுக ஆர்ப்பாட்டம் செய்வது தேவையற்ற செயல் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சிங்க பெருமாள் கோவில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் மாநில அளவிலான உறுப்பினர் சேர்க்கை மற்றும் மாவட்ட தலைவர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது.

 

இந்த பயிலரங்கத்தில் கட்சி தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ,முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிரிஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் பங்கேற்றனர். பொது மக்களுக்கு தண்ணீர்காக போர்க்கால நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று தமிழிசை கூறினார்.நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் உறுதுணையாக இருந்தது திமுக தான் என குற்றம் சாட்டினார். திமுக நடத்தும் மது ஆலைகளை மூடினாலே தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடுமென தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.


Leave a Reply