விஜய் ஷங்கருக்கு காயம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வலைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விஜய் ஷங்கருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் இந்திய வீரர்கள் சௌத்கேம்ப்டன் நகரில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த விஜய் ஷங்கருக்கு வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்தால் பாதத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும்,கவலை அளிக்கும் அளவிற்கு பெரிய அளவில்காயம் இல்லை என்று இந்திய அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

ஏற்கனவே தவான்,புவனேஸ்வர் குமார் ஆகியோரின் காயம் இந்திய அணியை வாட்டி வரும் நிலையில் சங்கர்க்கு ஏற்பட்டுள்ள காயம் இந்திய அணிக்கு கவலை அளிக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புவனேஸ்வர் குமார் காயத்தில் இருந்து மீளாதபட்சத்தில் இஷான் ஷர்மா, கலில் அகமது அணியில் சேர வாய்ப்பு உள்ளது.


Leave a Reply