காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்பது யாரென கட்சி முடிவெடுக்கும்-ராகுல் காந்தி

தனக்கு அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்கபோவது யார் என கட்சி தான் முடிவு செய்யும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.17 வது மக்களவை தேர்தலில் தோல்வியை கண்ட ராகுல் காந்தி அமைதியான மனநிலையில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் இடையே கூறப்படுகிறது. தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்த ராகுல் காந்தி ராஜினாமா கடிதத்தையும் வழங்கினார். ஆனால் அதை காரிய கமிட்டி நிராகரித்து விட்ட போதும் ராகுல் தன் முடிவில் பிடிவாதமாக உள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியின் அனைத்து மட்டத்திலும் சீர்திருத்த மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும்,ராகுலின் முடிவை மாற்ற குடும்பத்தினரும், கட்சியினரும் எடுத்த முயற்சி தோற்றன. இந்த நிலையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே தங்களுக்கு அடுத்த கட்சி தலைமையை ஏற்பது பற்றி கட்சி முடிவெடுக்கும் என ராகுல் கூறினார்.


Leave a Reply