தமிழகம் முழுவதும் 22 மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2,900 இடங்கள்

Publish by: --- Photo :


மருத்துவ படிப்புகளில் 25 சதவீதம் இடங்களை அதிகரித்துக்கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 22 இட மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 2,900 இடங்கள் இருந்த நிலையில், இப்போது கரூர் மாவட்டத்தில் 150 இடங்களுடன் கூடிய புதிய மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்காக 25 சதவிகித இடங்களை அதிகரித்துக்கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.மேலும் பொருளாதாரத்தில் நலிந்த,முன்னேறிய வகுப்பினற்கு 10 சதவிகித ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்தவும், மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.


Leave a Reply