அரியலூரில் மின்னல் வேகத்தில் தறிகேட்டு ஓடிய மினி லாரி ஒன்று பேத்தியின் கண் முன்னே முதியவர் மீது மோதியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது. அரியலூர் பெரியார் நகரை சேர்ந்த முருகேசன் உடையார் பாலத்தில் உள்ள இந்தியன் வங்கியில் நகையின் மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்று கிழமை இரவு அரியலூர் சின்னகடை தெருவில் உள்ள மருந்தகத்தில் பேத்தியுடன் மருந்து வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் புறப்பட தயாராகியுள்ளார். அப்போது பின்னால் அதிவேகத்தில் வந்த மினி லாரி பேத்தியின் கண் முன்னே முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் முதியவர் படுகாயம் அடைந்தார். தாத்தா மீது மினி லாரி மோதியதை கண்ட சிறுமி பதறி அழுத காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
மேலும் செய்திகள் :
வார இறுதி நாள்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
புதுவையில் மீனவர்கள் எம்எல்ஏவை முற்றுகையிட்டு வாக்குவாதம்..!
மோசடிக்கு உடந்தையாக இருந்த ஈ சேவை மைய உரிமையாளர்..!
பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் மத போதகர் கைது..!
மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர்..!
விஜய்யை கடுமையாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்!