மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு உதவும் வகையில் டைல்ஸ் பதிப்பு

கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டடத்தில் ரெய்லி டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டடத்தில் சத்துணவு திட்டத்துறை, இசேவை மையம்,நுகர்வோர் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகம் செயல்பட்டு வருகின்றன.

 

தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த 3 மாடிக் கட்டிடம் சேதமடைந்துள்ளதை அடுத்து அதை சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் பொது மக்கள் மட்டும் அல்லாது கண் தெரியாத மாற்றுத்திறனாளிகளும் வந்து செல்லும் வகையில் 3 தளங்களிலும் பாதையின் நடுவே ரெய்லி டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன.

 

குறிப்பாக கண் தெரியாத ஒருவர் நடக்கும் தூரத்தை அறிந்து கொள்ளவும், குறிப்பிட்ட அலுவலகத்தை உறுதி செய்து கொள்ளவும் நீளமான டைல்ஸ்கள் மற்றும் வட்ட வட்ட டைல்ஸ்களும் பதிக்கப்பட்டுள்ளன. இது மாற்றுத்திறனாளிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


Leave a Reply