தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் வசித்து வந்த சசிகலா,இளவரசி மற்றும் போயஸ் கார்டன் ஊழியர்கள் 15 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
அவருடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்ட பேரவை இடைத் தேர்தல்களின் போது சசிகலா,இளவரசி மற்றும் போயஸ் கார்டனின் ஊழியர்கள் 15 பேர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் உள்ளன.
போயஸ் கார்டன் இல்லம் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாலும், சசிகலாவும், இளவரசியும் சிறையில் இருப்பதாலும் அவர்களுடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று வழக்கு அறிஞர் ரமேஷ் கூறியிருக்கிறார்.