ஃபீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதா நினைவு மண்டபம்- 5 மாதங்களில் திறக்கப்படும்

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவு மண்டபம் இன்னும் 5 மாதங்களில் மக்களின் பார்வைக்கு திறக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். நினைவு மண்டப கட்டுமான பணிகள் குறித்து பழனிசாமி ஆய்வு செய்தார்.எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே ஃபீனிக்ஸ் பறவை வடிவில் 50 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் உடன் இருந்தார்கள்.


Leave a Reply