வேலூரில் 6 வயது சிறுவன் கொலை-தாய் மற்றும் 2வது கணவர் கைது

Publish by: --- Photo :


வேலூர் மாவட்டம் வ.உ.சி நகரை சேர்ந்த ராமச்சந்திரன், காவியா தம்பதியினருக்கு 6 வயதில் தருண் என்ற மகன் இருந்தான். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த காவியா தருண் உடன் வாலாஜா பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

 

அங்கு ராணிப்பேட்டையை சேர்ந்த தியாகு என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டதையடுத்து அவரை காவியா திருமணம் செய்து கொண்டார். காவியா உடனான உறவுக்கு தருண் இடையூறாக இருப்பதாக கருதி சிறுவனை தியாகு அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன் தருணை தண்ணீர் டிரம்பில் மூழ்க வைத்து கொலை செய்ததாகவும் , அதற்கு காவியா தடுக்கவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.

 

இருவரும் சிறுவனின் சடலத்தை ஆர்காடு அருகே உள்ள பாலாற்றில் புதைத்து உள்ளனர். இச்சம்பவம் கிராம நிர்வாக அலுவலருக்கு தெரிய வந்ததையடுத்து அவர் காவல் துறையிடம் புகார் தெரிவித்தார். போலீசார் கொலையை கண்டறியவே, அவர்கள் கொலையை ஒத்துக்கொண்டனர்.


Leave a Reply