திருமண நிகழ்ச்சிகளில் மொய், பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை திருடும் நபர் கைது

திருமண நிகழ்ச்சிகளில் மொய், பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை திருடும் நபரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கிழக்கு கடற்கரை சாலை ஃபுட் வில்லேஜ் பேக்டரி என்ற உணவகத்துடன் கூடிய ரெசார்ட்டில் கடந்த ஞாயிறு இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர் மேடை ஏறி மணமக்களை வாழ்த்திவிட்டு அருகிலேயே நின்று பரிசுப்பொருட்களை வாங்கி வைப்பது போல திருட முயன்றுள்ளார்.

 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த நபரை பிடித்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் சரவணன் என்பதும், ஐ‌டி நிறுவனத்தில் துப்புரவு பணி செய்து வருவதும் , தெரிய வந்தது. மேலும் இதே போல நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 2 மோதிரங்களும், 16000 ரூபாய் மொய் பணத்தையும், அந்த நபர் திருடியதும் தெரிய வந்தது. திருமணவிழாக்களில் உறவினர் போல சென்று நூதன திருட்டில் ஈடுபட்டு வந்தது   தெரிய வந்துள்ளது.


Leave a Reply