அதிக குதிரை திறன்கொண்ட இன்ஜின்களை பொருத்திய விசைப்படகுகள் மீது நடவடிக்கை

அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின்களை பொருத்திய விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த கோரி தூத்துக்குடி திரேஸ்புரத்தில் உள்ள நாட்டு படகு மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் 150 க்கும் மேற்பட்ட விசைபடகுகள் உள்ளன.

 

இவற்றில் 240 ஹெஜ்விக்கும் அதிகமான குதிரை திறன் கொண்ட இன்ஜின்களை பொருத்திய விசைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் குஞ்சுகளையும் சேர்த்து பிடித்து வருவதால் மீன் வளம் பாதிக்கப்படும் என்று திரேஸ்புரத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே இந்த வகை விசைபடகுகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


Leave a Reply