பரோலில் வெளிவந்த சிறைக்கைதி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பரோலில் வெளிவந்த சிறைக்கைதி மனைவியுடன் இணைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளான். குவளைக்கால் கிராமத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக இரட்டை ஆயுள் தண்டனை பெற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 3 நாள் பரோல் அனுமதி பெற்று வெளியே வந்த நிலையில் அவரது மனைவி சரஸ்வதியுடன் இணைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

குடும்பத் தகராறு காரணமாகவே இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply