தண்ணீர் பிடிப்பதில் இரு சமூகத்தினரிடையே பிரச்சனை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஊருக்கு பொதுவான ஆழ்துளை கிணற்று நீரை ஒரு சமூகத்தினர் பிடிக்க விடாமல் தடுப்பதாக கோரி மற்றொரு சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் கிராமத்தில் இரு வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீர் பிடிக்க அங்கு பொது ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது.

 

இதில் குறிப்பிட்ட சமூகத்தினர் தங்களை தண்ணீர் பிடிக்க விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டும் மற்றொரு வகை சமூகத்தினர் அவர்களை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் வந்து சமாதானம் செய்த பின் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் வந்தவாசி, மேல்மருவத்தூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply