டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழக முதல்வர் பழனிசாமி

டெல்லியில் பிரதமர் நரேந்தர மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி உள்ளார். பிரதமர் இல்லத்தில் சுமார் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சம்பவத்தின்போது மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்குமாறு வலியுறுத்தினார்.

 

தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் கொடுத்தார்.மேலும், தமிழத்தில் நிலவும் வறட்சி ,குடிநீர் பிரச்சனை குறித்து விவரித்து காவிரி நீரை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

 

தொடர்ந்து பிற்பகலில் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்து இருக்கிறார். தொடர்ந்து நிதின் கட்கரியையும் பழனிசாமி சந்தித்துள்ளார். பின்னர் மாலை நடைபெறவிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். கூட்டம் முடிந்த பிறகு அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளார்.


Leave a Reply