விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினி லாரி மீது கார் மோதி விபத்து

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நின்று கொண்டிருந்த மினி லாரி மீது  கார்  மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து வந்த கார் ஒன்று திண்டிவனம் அடுத்த கேணிப்பட்டு அருகே வந்துள்ளது. அப்போது  வலது புறமாக வந்த வாகனம் ஒன்று காரினை ஒதுக்கி விட்டு சென்றுள்ளது.

 

இதையடுத்து, பழுதாகி சாலையில் நின்று கொண்டிருந்த வெங்காயம் ஏற்றி செல்லும் லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த ராஜா என்பவர் உயிரிழந்தார். காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.


Leave a Reply