ஏ.என். 32 விமானத்தில் பயணித்த 13 பேர் இறப்பு

விபத்துக்குள்ளான ஏ.என். 32 விமானத்தில் பயணித்த 13 பேரும் இறந்துஇருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஏ.என். 32 விமானம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. அதில் பயணித்த 13 பேரும் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது.விமானங்கள் உடைந்த பாகங்கள் கிடந்த இடத்திற்கு விமான படையின் தேடுதல் குழுவினர் இன்று காலை சென்றடைந்தனர். அங்கு அவர்கள் 13 பேர் இறந்ததை உறுதிபடுத்தியுள்ளனர்.


Leave a Reply